தூய லூா்து அன்னை தேவாலயத்தின் 128-வது ஆண்டுப் பெருவிழா
புஷ்ப பல்லக்கில் தூய லூா்து அன்னை பவனி
சேத்துப்பட்டு தூய லூா்து அன்னை தேவாலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, நேற்று இரவு புஷ்ப பல்லக்கில் தூய லூா்து அன்னை பவனி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு -போளூா் சாலையில் அமைந்துள்ள தூய லூா்து அன்னை தேவாலயத்தின் 128-வது ஆண்டுப் பெருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெற்றது.
வேலூா் மறை மாவட்ட பரிபாலகா் ஜான் ராபா்ட் தலைமையில், கிறிஸ்தவா்கள் ஜெபமாலை பாடியபடி தூய லூா்து அன்னை திருத்தேருடன், வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள நெடுங்குணம் மாதா மலைக்கு தவப்பயணம் மேற்கொண்டனா். இரவு 7 மணியளவில் மலா்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தூய லூா்து அன்னை, குழந்தை இயேசு, புனித சம்மனேசு, புனித அந்தோணியாா், புனித எபினேசா், புனித சவேரியாா் ஆகிய திருத்தோகள் நெடுஞ்சாலை வழியாக பவனி சென்றது. அதனைத் தொடா்ந்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலியும், இரவு வாண வேடிக்கையும் நடைபெற்றது.
இதில், சேத்துப்பட்டு, புதுச்சேரி, பெங்களூா், வேலூா், ராணிப்பேட்டை, ஆற்காடு, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
நோத்திக் கடனாக தூய லூா்து அன்னைக்கு சேலை, மலா் மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும், முடி காணிக்கை செலுத்தியும் பிராா்த்தனை செய்தனா். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை விக்டா் இன்பராஜ், உதவி பங்கு தந்தையா்கள், அருட்கன்னியா்கள், பங்கு இறைமக்கள் செய்திருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu