இளைஞர் திறன் திருவிழா: வேலையில்லா இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு

இளைஞர் திறன் திருவிழா: வேலையில்லா இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு
X

பைல் படம்.

Youth Unemployment In India- இளைஞர் திறன் திருவிழாவில் வேலை இல்லாத இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு.

Youth Unemployment In India- திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் நாளை செவ்வாய்க்கிழமை இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ்பெண்ணாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் இந்த இளைஞர் திருவிழா நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை வாய்ப்புடன் கூடிய தங்கிப் பயிலும் தொழில்திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முகாமில் கலந்து கொள்ள விரும்பும் பத்தாம் வகுப்பு முதல் அதற்கும் அதிகமான கல்வித் தகுதிகள், இதர விளையாட்டு தகுதிகள் கொண்ட ஆண்கள், பெண்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஜாதி சான்று, ஆதார் அட்டை, கல்வி தகுதி சான்றுகள்களின் நகல் அசல் உடன் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட இயக்க மேலாண்மை துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனரை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story