திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
X
திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தார்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூர் கத்தாழம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 20). இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்தார்.

எடப்பாளையம் மேலத்திக்கான் பகுதியில் புதிதாக வீடு கட்டும் இடத்தில் மின் விளக்கு பொருத்தி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜமாணிக்கம் மயக்கம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!