மனைவி மாமியாரை வெட்டி விட்டு எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி மாமியாரை வெட்டி விட்டு எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
X
கீழ்பென்னாத்தூர் அருகே மனைவி, மாமியாரை கொடுவாளால் வெட்டி விட்டு எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த மங்கலம் பகுதியில் உள்ள கோடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 27), எலக்ட்ரீசியன். இவரின் மனைவி சசிகலா (25). இவர்களுக்கு யுவனேஷ் (4) என்ற மகனும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சசிகலாவின் நடத்தையில் ராமசாமிக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு சசிகலா தனது தாய் வீடான கீழ்பென்னாத்தூர் அருகில் உள்ள சோ.நம்மியந்தல் கிராமத்துக்கு 2 மாதத்துக்கு முன்பு சென்று விட்டார். இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் ராமசாமி சோ.நம்மியந்தல் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டுக்குச் சென்றார்.

வீட்டில் தூங்கி கொண்டிருந்த சசிகலாவை தட்டி எழுப்பி, தான் வைத்திருந்த கொடுவாளால் சசிகலாவின் கழுத்து, தலை, கை, கால் மற்றும் பல இடங்களில் சரமாரியாக வெட்டினார். அப்போது தடுக்க வந்த மாமியார் ஞானாம்பாளை (50) கையில் கொடுவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சசிகலாவையும், கையில் வெட்டு விழுந்த ஞானாம்பாளையும் அங்கிருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

சசிகலா இறந்து விடுவார் எனப் பயந்த ராமசாமி கீழ்பென்னாத்தூரை அடுத்த வட்ராபுத்தூரில் ஒருவரின் விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமசாமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!