திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த வட்டாட்சியர் சரளா.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வட்டாட்சியர் மஞ்சுளா நகராட்சி ஆணையர் குமரன் உதவி காவல் ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போளூர்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு காமராஜர் பேருந்து நிலையத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
உடன் தேர்தல் தாசில்தார் கோமதி தலைமை இடத்து தாசில்தார் விஜயராணி மண்டல தாசில்தார் காஜாஉள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 14 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கிராம நிர்வாக அலுவலர் மாதேஸ்வரன், உதவியாளர் சங்கீதா, அங்கன்வாடி பணியாளர் மஞ்சுளா, சத்துணவு பணியாளர் கனகா உள்ளிட்டோர் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு வாக்காளர்களின் உறுதிமொழி வாயிலாக விழிப்புணர்வு வழங்கினர். உடன் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணியை வட்டாட்சியா் சரளா தொடங்கி வைத்தாா்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சென்றடைந்தது.
பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 18 வயது நிறைவடைந்தவா்கள் புதிய வாக்காளராகப் பதிவு செய்வதன் அவசியம் குறித்தும் முழக்கங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில், துணை வட்டாட்சியா் தனபால், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சீத்தாராமன், மண்டல துணை வட்டாட்சியா் மாலதி, வட்ட வழங்கல் அலுவலா் ஜான்பாஷா மற்றும் பள்ளி மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu