திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்
கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்.
கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து பா.ஜ.க. மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பாதுகாப்புடன் கொண்டாட போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 10 அடி உயரத்திற்கு மேல் சிலைகள் வைக்கக்கூடாது. சிலை வைப்பவர்கள் உரிய அனுமதி பெற வேண்டும் என்பது உள்பட 14 விதிமுறைகளை சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் கூறி, ஆலோசனைகளை வழங்கினார். இதில் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் பாவேந்தன், செயலாளர்கள் பாலு, முத்துக்குமரன், வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் வெங்கடேசகுமார், செயலாளர் வேலுமணி, அ.தி.மு.க. கிளை செயலாளர் சீனிவாசன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.
தூசி:
செய்யாறு தாலுக்கா தூசி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும்போது அமைதியை கடைபிடித்து அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் விழா குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கம்:
செங்கம் டிஎஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டத்தில், டிஎஸ்பி சின்ராஜ் சிலை அமைப்பாளர்களை வரவேற்று விநாயகர் சதுர்த்தி விழாவின்போது தமிழக அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து வட்டாட்சியர் முனுசாமி பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது நிகழாண்டு கொண்டாடுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே அரசு விதிமுறைகளை கடைபிடித்து விழாவை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதில் நகர பாஜக நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu