வேட்டவலம் பேரூராட்சியில் புதிதாக மினி டேங்குகள் சிமெண்ட் ரோடுகள் :துணை சபாநாயகர் திறப்பு

வேட்டவலம் பேரூராட்சியில் புதிதாக மினி டேங்குகள் சிமெண்ட் ரோடுகள் :துணை சபாநாயகர் திறப்பு
X

புதிதாக அமைக்கப்பட்ட மினி டேங்க்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்

வேட்டவலம் பேரூராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட மினி டேங்க்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துணை சபாநாயகர் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சியில் 14 லட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட ஐந்து மினி டாங்குகள் மற்றும் சிமெண்ட்ரோடுகளை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.

கீழ்பெண்ணாத்தூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வேட்டவலம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேரடி வீதி, திருக்கோவிலூர் ரோடு, சின்ன கடை தெரு, பாரதி தெரு ஆகிய பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மினி டேங்க் அந்தோணியார் தெரு, திரு வி க தெரு ,ஆகிய பகுதிகளில்ரூ. 4 லட்சம் மதிப்பில் சிமெண்ட்ரோடு ஆகியன புதிதாக அமைக்கப்பட்டது .

இதனை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமை தாங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

முன்னதாக அண்ணா நகர் பகுதியில் பேரூராட்சியின் சார்பில் செயல்பட்டு வரும் வளம் மீட்பு பூங்காவில் மக்கும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் பணி இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகையன் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள் ,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ,அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture