வேட்டவலம் அதிமுக நகர செயலாளர் கைது: 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

வேட்டவலம் அதிமுக நகர செயலாளர் கைது: 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
X

பைல் படம்.

வேட்டவலம் அ.தி.மு.க. நகர செயலாளர் கைது செய்யப்பட்டதையடுத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் நகர தி.மு.க. செயலாளர் முருகையனை சந்திப்பதற்காக கடந்த 23-ந் தேதி நேரு தெருவை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வமணி மற்றும் அவரது கட்சியினர் இருந்துள்ளனர்.

பேரூராட்சி செயல் அலுவலரிடம் தி.மு.க. நகர செயலாளர் முருகையன் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஜன்னல் ஓரத்தில் மணிவண்ணன் செல்போனை கையில் வைத்துக்கொண்டு நின்றுள்ளார். அலுவலகத்துக்குள் அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை புகைப்படம் எடுத்ததாக நினைத்துக்கொண்டு, ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாலும் தன்னை அ.தி.மு.க. நகர செயலாளர் செல்வமணி கட்டையால் தன்னை தாக்கியதாகவும், அவருடன் வந்தவர்கள் தன்னை இழுத்துச்சன்று சரமாரியாக தாக்கியதாகவும் வேட்டவலம் போலீசில் மணிவண்ணன் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் நேற்று மாலை விசாரணை செய்து வேட்டவலம் நகர அ.தி.மு.க. செயலாளர் மீது கொலை முயற்சி மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.

அ.தி.மு.க. நகர செயலாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா