வீட்டை உடைத்து நகைகளை திருடிய இரண்டு நபர்கள் கைது

வீட்டை உடைத்து நகைகளை திருடிய இரண்டு நபர்கள் கைது
X
கீழ்பென்னாத்தூர் அருகே வீட்டை உடைத்து நகைகளை திருடிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர், சேர்ந்த உதயக்குமார் என்பவர் வீட்டை பூட்டி விட்டு பாண்டிச்சேரிக்கு சென்று திரும்பி வந்து பார்க்கும் போது வீட்டின் முன்பக்கம் கேட், வீட்டின் உள்ளே இருந்த பிரோ ஆகியவற்றை உடைத்து, பீரோவில் இருந்த நகைகள் திருடு போனதாக கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் அளித்திருந்தார்.

இது குறித்து தனிப்படை அமைத்து, வீட்டின் அருகில் இருந்த CCTV காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், கீழ்பென்னாத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையில், திண்டிவனம் சாலையில் நடத்திய வாகன சோதனையில் போது கீழ்பென்னாத்தூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கொண்டு இருந்த இரண்டு நபர்களையும் மடக்கி விசாரணை செய்தனர்.

அவர்கள் கீழ்பென்னாத்தூர், இந்திரா நகரைச் சேர்ந்த துரை குளக்கரை தெருவைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பதும் இருவரும் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த நபர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. மேற்படி இரண்டு நபர்களையும் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரிடமிருந்து உதயக்குமார் வீட்டில் திருடிய தங்க நகைகள் மொத்தம் 40 கிராம் மற்றும் திருட்டில் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!