கள்ள சாராயம் விற்பனை செய்த இருவர் கைது

கள்ள சாராயம் விற்பனை செய்த இருவர் கைது
X

பைல் படம்.

Police News -கலசப்பாக்கம் அருகே கள்ள சாராயம் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Police News -கலசப்பாக்கம் அருகே கள்ள சாராயம் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர் . அவர்களிடமிருந்து 236 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் புனிதா, மாவட்ட உதவி கலால் ஆணையர் குமரன் , டாஸ்மாக் மாவட்ட மேலாளர் புஷ்பலதா ஆகியோர் கலசப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மேல் சோழங்குப்பம் கிராம பகுதியில் கள்ளச்சாராயம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் அங்கு சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த முனியம்மாள் , விஜி ஆகிய இருவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதை அடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் லாரி டயர்களில் இருந்த 236 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

காதலியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த காதலன் போலீசார் கைது

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை வயது 30. இவர், 23 வயதுடைய பட்டதாரி இளம் பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்து உள்ளார். அப்போது அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏழுமலைக்கு வேெறாரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்காக ஏற்பாடு நடந்து உள்ளது. இதுபற்றி அறிந்ததும் இளம்பெண், ஏழுமலையை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு ஏழுமலை உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

மேலும் ஏழுமலையின் உறவினர்களும் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

அப்படி திருமணம் செய்ய வேண்டும் என்றால் நகை, பணம் எடுத்து வந்தால் தான் திருமணம் செய்ய முடியும் என்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். மேலும் ஏழுமலையின் உறவினர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்சம் கேட்டு மிரட்டிய வன ஊழியர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகே உள்ள நாடானூர் வனசரகத்திற்கு உட்பட்ட கல்லாத்தூர் பகுதியில் மலைவாழ் மக்கள் சீத்தாப்பழங்களை சரக்கு வேனில் ஏற்றி கொண்டிருந்தனர். அந்த சமயம் அங்கு வந்த வன காப்பாளர் சதீஷ்குமார் அவர்களிடம் ரூ.1,000 லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க வன அதிகாரிகளுக்கு மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவிட்டார். இதனையடுத்து வன அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் லஞ்சம் கேட்டு மிரட்டிய வன காப்பாளர் சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவிட்டார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story