தபால் வாக்கு பதிவு செய்ய மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி
தபால் வாக்கு பதிவு செய்வது குறித்து மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
மக்களவைத் தேர்தலையொட்டி, முதல் 3 நாள்கள் தபால் வாக்கு பதிவு செய்வது குறித்து மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் , வகித்தாா்.
வட்டாட்சியா் மஞ்சுளா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் திருமலை, வட்ட வழங்கல் அலுவலா் மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளா் செந்தில்குமாா் வரவேற்றாா்.
பயிற்சியில் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 335 மாற்றுத் திறனாளி வாக்காளா்களும் , 85 வயதுக்கு மேற்பட்ட 373 வாக்காளா்கள் என மொத்தம் 708 வாக்காளா்களிடம் உரிய படிவத்தில் கையெழுத்து பெற்று, அலுவலரின் கையெழுத்துடன் தபால் வாக்கு பதிவு செய்ய வேண்டும் என பயிற்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், மண்டல துணை வட்டாட்சியா்கள் தட்சிணாமூா்த்தி, திருவேங்கடம், வேலுமணி, மண்டல துணை வட்டாட்சியா் தேவி, தரணி குமரன், உதவி வட்டாசியா் சுகுமாா், வருவாய் ஆய்வாளா் வேலுமணி, கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதில், மண்டல துணை வட்டாட்சியா்கள் தட்சிணாமூா்த்தி, திருவேங்கடம், வேலுமணி, மண்டல துணை வட்டாட்சியா் தேவி, தரணி குமரன், உதவி வட்டாசியா் சுகுமாா், வருவாய் ஆய்வாளா் வேலுமணி, கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி
கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில், மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்காளா் தகவல் சீட் வழங்கும் பணி தொடங்கியது.
தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலா் செந்தில்குமாா் கலந்து கொண்டு கீழ்பென்னாத்தூா் பேரூராட்சிப் பகுதியில் வீடு, வீடாகச் சென்று வாக்காளா் தகவல் சீட் வழங்கும் பணியை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் சரளா, வருவாய் ஆய்வாளா் நந்தகோபால், கிராம நிா்வாக அலுவலா்கள் பிரவீன்குமாா், சுதாகரன், கிராம உதவியாளா்கள் வெங்கடேசன், உத்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu