மகளிர் உரிமைத்தொகை தேர்வுக்காக தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம்
மகளிர் உரிமைத்தொகை தேர்வுக்காக தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை தேர்வுக்காக தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் வட்டார வள மையத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பெறுவதற்கான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்குவது, பூர்த்தி செய்வது தொடர்பான இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
தாசில்தார் சாப்ஜான் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வம், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், வட்ட வழங்கல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கீழ்பென்னாத்தூர் ஒன்றிய இல்லம் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் உள்ள 216 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இதில் கீழ்பென்னாத்தூர் வருவாய் ஆய்வாளர் நந்தகோபால், கிராம நிர்வாக அலுவலர்கள் சுதாகரன், பிரவீன்குமார், ஜெகதீசன் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டார வள மையத்தில், தமிழக அரசு வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை குறித்த பயனாளிகள் தேர்வு குறித்து நடைபெற்ற பயிற்சி முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் சுமதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் தாசில்தார் சசிகலா , கிராம நிர்வாக அலுவலர்கள் , கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வட்டார வள மைய கூட்ட அரங்கில் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக இல்லம் தேடி கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
இதில் வட்டாட்சியர் மஞ்சுளா , வட்டார வள மைய அலுவலர்கள் ஜெயஷிலி , வடிவேலன் , சரவணன் , தன்னார்வலர்கள் , ஆசிரியர்கள் , வட்டார வளமைய உறுப்பினர்கள் , கிராம நிர்வாக அலுவலர்கள் , கிராம அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu