திருந்திய கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகள் பயிற்சி முகாம்
கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற விவசாயிகள் பயிற்சி முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டம் 2024- 25ம் ஆண்டு, வேளாண்மை தொழில்நுட்பமேலாண்மை முகமையில் திருந்திய கரும்பு சாகுபடி (எஸ்எஸ்ஐ) பி.2(சி) குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குநர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். அட்மா குழு தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கரும்பு மேலாளர் சிவசண்முகம் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் , விவசாயிகளுக்கு திருந்திய கரும்பு சாகுபடி (எஸ்எஸ்ஐ) செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது ,
வேளாண்மை துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது, தனி யார் சர்க்கரை ஆலையின் துணை மேலாளர் மணிகண்டன் கலந்துகொண்டு கரும்பு நாற்று நடவின் பயன்கள் பற்றியும், திருந்திய கரும்பு பயிர் சாகுபடி முறையில் நாற்றாங்கால் நடவு, ஊடு பயிர் சாகுபடி செய்தல், சொட்டு நீர்ப்பாசனம், நீர்வழி உரமிடுதல், பூச்சி நோய் கட்டுப்படுத்துதல் போன்றவற்றை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
இந்த பயிற்சியின்போது, அட்மா குழு தலைவர் சிவக்குமார் கரும்பு சாகுபடியில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், அரசு மானியத்தில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.
கரும்பு விவசாயிகளுக்கு ஒரு பரு நாற்று ஒரு பரு கருணை, சோகை தூள் ஆக்குதல், அகல பார் நடவுமுறை, புதிய ரகங்கள் மற்றும் அகல பார் நடவுமுறை பயன்படுத்தி நடவு செய்யும் போது இயந்திரம் மூலம் களை எடுப்பது, மண் அணைப்பது போன்றவை குறித்தும் , கரும்பு பயிரை இயந்திரம் கொண்டு அறுவடை செய்வது குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) கருணாகரன், உதவி தொழில்நூட்ப மேலாளர் மீனா, தனியார் சர்க்கரை ஆலையின் கரும்பு அலுவலர் சிவசுப்பிரமணியன், மாவட்ட மேற்பார்வையாள ர் லிங்கமூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பயிற்சி முகாமில் கீழ்பென்னாத்தூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் மற்றும் விவசாய உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். வட்டார தொழில்நூட்ப மேலாளர் சங்கீதா நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu