திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்...

திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்...
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்:

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், வேட்டவலம் பேரூராட்சி பூரிக்காரன் தெருவைச் சோந்தவா் செந்தில்குமாா் (37). இதே பகுதியில் பானிப்பூரி கடை நடத்தி வருகிறாா். இவா், சில தினங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதை வெளியில் சொல்லக்கூடாது எனவும் அந்த சிறுமியை மிரட்டினாராம்.

சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. விசாரணையில், பாணிபூரி கடைக்காரர் செந்தில்குமார் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததை அந்த சிறுமி கூறினார். அதை தொடர்ந்த சிறுமி அவரது பாட்டியுடன் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

ஹோட்டலில் புகுந்த முகமூடி பெண் கொள்ளையர்கள்:

ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அசைவ ஹோட்டல் நடத்தி வருபவர் வசந்தகுமார் (வயது 40). இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். அதிகாலையில் காய்கறிகளை வாங்குவதற்காக கடைக்கு வந்தார். கடையை திறந்து பார்க்கும் போது கல்லாப்பெட்டி அருகே பணம் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பக்க இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. எனவே பின்பக்க கதவை உடைத்து திருட்டு நடந்தது தெரியவந்தது.

அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களை பதிவானதை பார்த்தபோது நள்ளிரவு ஒரு மணி அளவில் 2 பெண்கள் சுடிதார் அணிந்த நிலையில் ஸ்வட்டர் போட்டும் முகமூடி அணிந்தவாறு கல்லா பெட்டி அருகே இருந்த சாவியைக் கொண்டே கல்லாவை திறந்து அதிலிருந்து பணத்தை திருடுவது பதிவாகியிருந்தது. இது சம்பந்தமாக வசந்தகுமார் ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூட்டை உடைத்து திருடும் சம்பவங்களில் ஆண் திருடர்கள் ஈடுபட்டு வந்ததை த்தான் இதுவரை பார்த்திருப்போம். தற்போது இரண்டு பெண்கள் அதுவும் முகமூடி அணிந்து ஹோட்டல் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்த அடையாளம் கண்டு கைது செய்யும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!