/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்

திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்
X

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் தலைவர் திலகம் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் மேற்கு தொடர்ச்சி பள்ளியில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் தலைவர் திலகம் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் சர்தார் முன்னிலை வகிக்க பொருளாளர் அறிவரசு வரவேற்றார். இதன்பின் செயலாளர் குமார் அறிக்கை வாசித்து சமர்ப்பித்தார்.

கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் சி.அ.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வேலு, பிரான்சிஸ்அந்தோணி, ஆரோக்கியதாஸ்ஆகியோர்ஆலோசனை வழங்கி பேசினர்.

அப்போது சென்னையில் வருகிற 10-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ஜேக்டோ-ஜியோ மாநில மாநாட்டிற்கு கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திலிருந்து 100 பேருக்கு குறையாமல் பங்கேற்க வேண்டும்என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கல்வி மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட துணை தலைவர் விஜயகுமார், துணை செயலாளர் வினோத்குமார் உள்பட பலர் பேசினர். முடிவில் துணை செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

Updated On: 6 Sep 2022 7:07 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
  2. அரசியல்
    ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
  3. இந்தியா
    மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
  4. கரூர்
    கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
  6. இந்தியா
    உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி
  7. இந்தியா
    இந்தியாவின் ஸ்டைலில் மாறி வரும் உலகம்
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்க போறீங்களா.. இதைப்படிங்க
  9. கல்வி
    உலகின் சிறந்த பள்ளிகளாக 5 இந்தியப் பள்ளிகள் தேர்வு
  10. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு