கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்…

கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்…
X
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பராமரிப்பு பணிகளுக்கான மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். பொதுவாக வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது உண்டு.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும். அதன்படி, கீழ்பெண்ணாத்தூர், ஆண்டலூர், கரிக்கலாம் பாடி, ராயப்பேட்டை சிறுவத்தூர் வேடநத்தம் வழுதலங்குணம் கத்தாழம்பட்டு சோமாசிபாடி கடம்பை , கழிக் குளம், நல்லான்பிள்ளை பெற்றாள், கல் பூண்டி , மேக்களூர், ஆரஞ்சி, சோ காட்டுக்குளம், ராஜா தோப்பு, குன்னங்குப்பம் ஆகிய கிராமங்களுக்கு மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரிய கோட்ட பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!