திருட்டு வழக்கில் 2பேர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

திருட்டு வழக்கில் 2பேர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
X

இருசக்கர வாகனங்கள் திருடியவர்களை கைது செய்த போலீசார்

வாகன திருட்டு வழக்கில் 2 பேர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக அதிக அளவில் புகார்கள் காவல்துறையினருக்கு வந்துள்ளது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீசார் வேங்கிக்கால் பகுதி மற்றும் பைபாஸ் சாலையில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் அந்த இருவரும் வாகனத்தை திருப்பிக் கொண்டு தப்பியோட முயன்றனர்.

இதைகண்டு சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருவண்ணாமலை இனாம்காரியந்தல் பகுதியைச் சேர்ந்த அருண் (வயது 21), மற்றும் 19 வயது வாலிபர் என்பதும், அவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டு ஈடுபட்டு உள்ளதும் தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை கிழக்கு, திருவண்ணாமலை தாலுகா, மங்கலம் ஆகிய போலீஸ் நிலையங்கள் உட்பட்ட பகுதிகளில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

சேத்துப்பட்டில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேத்துப்பட்டு வெங்கடாஜலபதி தெருவை சேர்ந்த விநாயகம் என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி மோதி கணவன்-மனைவி பலி

கீழ்பென்னாத்தூர் அருகே பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது லாரி மோதி கணவன், மனைவி பரிதாபமாக இறந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா புதூர் பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, விவசாயி. இவரது மனைவி தங்கமணி

கணவன், மனைவி இருவரும் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள தாங்கல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

விழா முடிந்தவுடன் கணவன், மனைவி இருவரும் இரவு சொந்த ஊருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

கீழ்பென்னாத்தூர் சந்தைமேடு அருகில் உள்ள புறவழி சாலை அருகே வந்தபோது வேகமாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கணவன், மனைவி இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் ஏற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!