சொத்து பிரச்சினையில் உறவினரே கொலை மிரட்டல் விடுத்த சோகம்

சொத்து பிரச்சினையில் உறவினரே கொலை மிரட்டல் விடுத்த சோகம்
X
விவசாயியிடம் சொத்து பிரச்சினைக்காக கொலை மிரட்டல் விடுத்த உறவினர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுக்கா வேட்டவலம் பகுதியில் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி, அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், உறவினர்களான இவர்கள்இருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அங்குள்ள ரைஸ்மில் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மணிகண்டனுக்கும் கிருஷ்ணமூர்த்திக்கு மிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி, ஆத்திரமடைந்த மணிகண்டன் கிருஷ்ணமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல், கைகலப்பில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி வேட்டவலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!