ஏர் ஓட்டிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்
ஏர் ஓட்டிய கலெக்டர்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த அணுக்குமலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குறுவை சாகுபடிக்காக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இன்று ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார். மேலும் புதிதாக விவசாயிகளுக்கு ஒரு செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த செயலி மூலம் பதிவு செய்யும் விவசாயிகள் தங்களது பொருட்களை எப்போது கொண்டு வர வேண்டும் என்று கூறுகிறார்களோ அதற்கு முதல் நாள் மட்டுமே நெல் மூட்டைகளை எடுத்து வந்தால் போதும். அப்போது தான் தங்களது பொருட்கள் இயற்கை சீற்றங்களால் வீணாகாமல் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஆவூர் மற்றும் நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்துறை மூலம் செயல்படுத்தப்படும் கூட்டுப் பண்ணை திட்டத்தின் மூலம் ஆவூர் வேளாண் உற்பத்தி குழுவிற்கு 2020-2021 மூலதன நிதி மூலம் பல்வகை தானியம் அடிக்கும் கருவி ஒன்று, சுழல் கலப்பை 2, மற்றும் களை எடுக்கும் கருவி ஆகியவற்றை வழங்கினார்.
மேலும் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் நாடழகானந்தல் கிராமத்தில் கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப் பட்டுள்ளதையும், கரும்பு கரணைகள் நடவு முறையையும் ஆட்சியர் பார்வையிட்டு, கரும்பு நடவு செய்தார். அப்போது ஆட்சியர் முருகேஷ் நிலத்தில் ஏர் ஓட்டினார்.
வேளாண் இணை இயக்குனர் முருகன், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்தியமூர்த்தி, உதவி இயக்குனர் சந்திரன், அலுவலர்கள் பிரியங்கா, சுப்பிரமணி, மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலைய மண்டல மேலாளர் கோபிநாத், துணை மண்டல மேலாளர் பழனி, கண்காணிப்பாளர் சீனிவாசன், கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனி, தாசில்தார் வைதேகி, வேட்டவலம் வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டார வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu