பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் திருவண்ணாமலை கலெக்டர் ஆய்வு
பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
Student Hostel -திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் வட்டம் வேட்டவலத்தில் செயல்பட்டு வரும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அரசினர் மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாணவியர்களுக்கு சமைக்கப்படும் உணவு, உணவுப் பொருட்கள் கையிருப்பு, வருகை பதிவேடு , ஆகியவற்றினை ஆய்வு செய்தார்.பின்னர் அங்கு தங்கியுள்ள மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.
அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது கீழ்பெண்ணாத்தூர் வட்டாட்சியர் சர்க்கரை, வருவாய் ஆய்வாளர் அல்லி, பேரூராட்சி செயல் அலுவலர்கள், விடுதி காப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu