திருவண்ணாமலை: வேட்டவலம் அருகே வீடு இடிந்து விழுந்து சிறுவன் பலி

திருவண்ணாமலை: வேட்டவலம் அருகே வீடு இடிந்து விழுந்து சிறுவன் பலி
X

தரனேஷ் (வயது 9)

வேட்டவலம் அருகே வீடு இடிந்து விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த இலுப்பதாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். அவரது மகன் தரனேஷ் (வயது 9). சக்திவேலின் தந்தை அண்ணாதுரை. மழைக்காலத்தில், நேற்று மாலையில் ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் அண்ணாதுரை, தரனேஷ் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இன்று அதிகாலை அங்கு சிகிச்சை பலனின்றி தரனேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். அண்ணாதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!