திருவண்ணாமலை: அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருவண்ணாமலை: அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
X

திருவண்ணாமலை அருகே அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை அருகே முன்னாள் மாணவர்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி கலந்துரையாடினர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த ராஜன்தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2012-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்த முன்னாள் மாணவர்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி கலந்துரையாடினர்.

முன்னாள் மாணவர்களில் பலரும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடிய சந்திப்பு நிகழ்ச்சியில் தாங்கள் படித்த போது பணியாற்றிய முன்னாள் தலைமை ஆசிரியர் சம்பந்தம் மற்றும் முன்னாள், இன்னாள் வகுப்பு ஆசிரியர்கள் 15 பேருக்கு சால்வை அணிவித்து கவுரவித்து, பாராட்டி பேசினர்.

அப்போது பள்ளிக்கு தேவையான குடிநீர் குழாய் அமைத்துத் தருதல், ஆசிரியர்களுக்கு நாற்காலிகளை வாங்கி தருவதாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும் முன்னாள் மாணவ-மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் பேசினர். அப்போது அனைவரும் தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டு கலந்துரையாடினர்.

Tags

Next Story
ai market future