கவுதம நதியில் மாசி மகத்தை ஒட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரி

கவுதம நதியில் மாசி மகத்தை ஒட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரி
X

கவுதம நதியில் மாசி மகத்தை ஒட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற்றது.

திருவண்ணாமலை அருகே உள்ள பள்ளிகொண்டாபட்டு கவுதம நதியில் மாசி மகத்தை ஒட்டி அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று பள்ளிகொண்டபட்டு கிராமத்தில் கவுதம நதியில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

அதைத்தொடர்ந்து அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் பள்ளிகொண்டபட்டு கிராமத்திற்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் அண்ணாமலையாருக்கு மண்டகப்படி நடந்தது. மதியம் கவுதம நதிக்கு சென்றடைந்த அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது.

பின்பு வள்ளாள மகாராஜாவிற்கு அண்ணாமலையார் திதி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கவுதம நதியில் பலத்த போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கவுதம நதியில் அதிக அளவில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் பக்தர்கள் ஆற்றில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil