மது போதையில் நண்பனைக் கொன்று குளத்தில் வீசிய பயங்கரம்

மது போதையில் நண்பனைக் கொன்று குளத்தில் வீசிய பயங்கரம்
X
திருவண்ணாமலை அருகே மது போதையில் நண்பரைக் கொண்டு குளத்தில் வீசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

சோமாசிப்பாடி கோவில் குளத்தில் பிணமாக கிடந்தவர் மதுபோதையில் நடந்த தகராறில் அவரை நண்பர்களே கொலை செய்து குளத்தில் வீசியது அம்பலமானது.

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான முருகன் கோயில் உள்ளது.

இந்தக் கோயில் குளத்தில் கடந்த 8-ஆம் தேதி காலை சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது தெரியவந்தது. கீழ்பென்னாத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் அதே பகுதியில் உள்ள சிறுகொத்தான் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் விஜயகுமார் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் நடந்த பிறகு அவரது நண்பர்களான மோகன் மகன் அறிவுச்செல்வன் , சீனிவாசன் மகன் பிரவீன்குமார் பாலு மகன் அசோக்குமார் ஆகிய 3 பேர் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து விசாரணை நடத்தியபோது விஜயகுமாருடன் இவர்கள் ஒன்றாக மது அருந்தியது தெரியவந்தது. இந்த நிலையில் அவர்களை போலீசார் தேடிச்சென்றபோது அறிவுச்செல்வன், பிரேம்குமார் ஆகிய 2 பேர் மட்டும் சிக்கினர்.

விசாரணையில் கடந்த 7-ந் தேதி 4 பேரும் மது அருந்தியதாகவும், போதையில் நடந்த தகராறில் அசோக்குமாருடன் சேர்ந்து விஜயகுமாரை மற்ற மூவரும் சோந்து கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்துக் கொன்றதும் தெரியவந்தது.

பிறகு, சடலத்தை சோமாசிபாடி முருகன் கோயில் குளத்தில் வீசி விட்டுச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, மா்மச் சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த கீழ்பென்னாத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் கோவிந்தசாமி, அறிவுச்செல்வன், பிரவீன்குமாா் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பாலு மகன் அசோக்குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!