பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகை

பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகை
X

பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ரூபாய் 6.57 லட்சத்தில் ஊக்கத் தொகையை தமிழக துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.

பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகை துணை சபாநாயகர் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் சோமாசிபாடி ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ரூபாய் 6.57 லட்சத்தில் ஊக்கத் தொகையை தமிழக துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.

சோமாசிபாடி ஊராட்சியில் இயங்கிவரும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. துணைப்பதிவாளர் பால்வளம், சந்திரசேகர ராஜா தலைமை வகித்தார்.ஆவின் பொது மேலாளர் ராஜ்குமார் , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தமிழக துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்துகொண்டு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கி தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.முன்னதாக சோமாசிபாடி ஊராட்சியில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் விவசாயிகள் ,அரசு அலுவலர்கள் ,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story