மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்
X

மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி

மங்களம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துணை சபாநாயகர் தொடங்கி வைத்து நல திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, தலைமை தாங்கினார் . முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் பாலு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கோபு அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை தொடங்கி வைத்து பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அப்போது அவர் பேசுவையில், இந்த மக்களுடன்முதல்வன் என்ற சிறப்பு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காக தாங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு இந்த கோரிக்கை மனுக்கள் கொடுப்பதற்கு மக்கள் தொலைதூரம் சென்று தாலுகா அலுவலகத்திலும் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் அல்லது மாவட்ட ஆட்சிய ர் அலுவலகத்திலோ கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் மக்களை தேடி தமிழக அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும். அதனால் மக்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக இந்தமக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்.

இந்த திட்டத்தின் மூலம் மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் மீது சரியான முறையில் பரிசீலனை செய்து மனு கொடுத்த 30 நாட்களுக்குள் அவர்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மேலும் இந்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி செய்து மக்களின் குறைகளை போக்க வேண்டும். இதுதான் இந்த திட்டத்தின் முழு நோக்கம். இந்த திட்டத்தில் நத்தம் பட்டாநகல் வழங்குதல் 4 பயனளிகளுக்கு வழங்கப்பட்டது, நிலப்பட்ட மாறுதல் 5 பயணிகளுக்கு வழங்கப்பட்டது, அதேபோல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 7 குழுக்களுக்கு தல ஐம்பதாயிரம் எனகடனுதவி வழங்கப்பட்டது, இந்த மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஆரஞ்சி ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் சகாதேவன், ஒன்றிய கவுன்சிலர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் அருணா, தமிழரசி, பிரசன்னா, மாவட்ட ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் ஏழுமலை, ஒன்றிய துணை செயலாளர் அப்பாசாமி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அன்பழகன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் , அரசு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது