உயர்கோபுர மின்விளக்குகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

உயர்கோபுர மின்விளக்குகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்த துணை சபாநாயகர்
X

உயர்கோபுர மின்விளக்குகளை பயன்பாட்டுக்கு, தொடங்கி வைத்த துணை சபாநாயகர் பிச்சாண்டி.  

கானலாபாடி ஊராட்சியில் உயர்கோபுர மின்விளக்குகள் பயன்பாட்டை, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கானலாபாடி ஊராட்சியில் அடங்கிய கானலாபாடி, ஊதப்பூண்டி, ஆதிதிராவிடர் குடியிருப்பு மற்றும் பட்டி ஆகிய ஊர்களில் 15 இடங்களில் புதியதாக உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.

இதனை மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரும் நிகழ்ச்சி அனைத்து ஊர்களிலும் நடந்தது. கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆராஞ்சி ஆறுமுகம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா சுப்பிரமணி முன்னிலை வகித்தார்.

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். பின்னர் கல்வெட்டை திறந்து வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் ஒன்றிய அவைத்தலைவர் ரவி, , சோமாசி பாடி ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஒன்றிய செயலாளர் , கிளைச் செயலாளர்கள் , ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற ஒன்றிய அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story