வேட்டவலத்தில் சிமெண்ட் சாலையை திறந்து வைத்த துணை சபாநாயகர்

வேட்டவலத்தில் சிமெண்ட் சாலையை திறந்து வைத்த துணை சபாநாயகர்
X

நிகழ்ச்சியில் பேசிய துணை சபாநாயகர்

வேட்டவலத்தில் புதிய சிமெண்ட் சாலையை துணை சபாநாயகர் திறந்து வைத்தார்.

வேட்டவலத்தில் 16.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட திட்டபணிகள் மக்கள் பயன்பாட்டிற்கும், ஒரு கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் திட்டங்களை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தில் 16.20 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட திட்டபணிகள், மக்கள் பயன்பாட்டிற்கும் ரூ.1 கோடியே 66 லட்ச மதிப்பீட்டில் நடைபெற உள்ள திட்ட பணிகளின் தொடக்க விழா கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வேட்டவலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முருகையன் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம்,,ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் இராஜேந்திரன், பேரூராட்சி மன்ற தலைவர் கௌரி நடராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

பேரூராட்சி செயல் அலுவலர் வரலட்சுமி வரவேற்றார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரூ.16.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிந்த காரிய மேடை மற்றும் சிமெண்ட் சாலை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து ரூ.1 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 6- தெருகளில். பேவர் பிளாக் சாலையும் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பி ன்ன ர் ப சு மை வேட்டவலம் அமைப்பின் நிறுவனத் தலைவர் வினோத் ஏற்பாட்டில் மாதா கோவில் தெருவில் இருந்து மலை மாதா கோவில் செல்லும் சாலை வழியில் இருபுறங்களிலும் சுமார் 1000 மரக்கன்றுகளை நடும் பணியை தமிழக சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பங்குத் தந்தை ஆரோக்கியசாமி, நகர துணை செயலாளர் ரமேஷ் ,துணைத் தலைவர் ஜெயலட்சுமி ரங்கநாதன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் அன்சார், பழனி, மணிபிள்ளை,டேவிட், சங்கர், வைத்தீஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!