புதிய நீதிமன்றம் அமைய உள்ள கட்டிடம்; துணை சபாநாயகர் ஆய்வு
புதிய நீதிமன்றம் அமைய உள்ள கட்டிடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த துணை சபாநாயகர்
கீழ்பெண்ணாத்தூர் புதிய நீதிமன்றம் அமைய உள்ள கட்டிடம் சீரமைக்கும் பணிகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் விரைவில் புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைய உள்ளது. நீதிமன்றம் அமைவதற்கான தற்காலிகமாக உள்ள கட்டிடத்தை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்திய கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான பிச்சாண்டி ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது நகர திமுக செயலாளர் அன்பு, மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், துணைச் செயலாளர் சிவக்குமார், பேரூராட்சி தலைவர்கள், அரசு ஒப்பந்தக்காரர்கள், வழக்கறிஞர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நேச நலன் காக்கும் நேச மாநாடு துணை சபாநாயகர் பங்கேற்பு
திருவண்ணாமலை வேங்கி காலில் உள்ள தனியார் திருமண மஹாலில் மாவட்ட அனைத்து கிறிஸ்துவ மக்களின் கூட்டமைப்பு சார்பில் நேச நலன் காக்கும் நேச மாநாடு நடைபெற்றது..
இக்கூட்டத்திற்கு ஞான ஜோதி தலைமை தாங்கினார். கார்மேல் சபை ஆயர் சாமுவேல், மாவட்ட அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு தலைவர் பிஷப் பன்னீர்செல்வம், செயலாளர் வேட்டவலம் லயோலா கல்லூரி ஆசிரியர் மரியநாதன் ஆகியோர் மாநாட்டினை வாழ்த்தி பேசினார்.
இந்த மாநாட்டினை துணை சபாநாயகர் பிச்சாண்டி , தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றினார். தொடர்ந்து மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ. வ. வே. கம்பன், நகர மன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல் மாறன் ,அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ,சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட துணை செயலாளர் ராயல் தியாகு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மஸ்தான் , கிறித்துவ மக்களின் நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி விழா பேருரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மை இன மக்களுக்கு என்றென்றைக்கும் துணை நிற்கும். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இங்கே கூட்டமைப்பு நிர்வாகிகள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சிறுபான்மையின பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu