பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
X
வேட்டவலம் அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்:

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்17 வயது மாணவி. இவர் அண்டம்பள்ளம் கிராமத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் 3-ந் தேதி தேர்வுக்கு சென்ற மாணவி அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் வேட்டவலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் மற்றும் போலீசார் மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாணவியை பன்னியூர் கிராமத்தை சேர்ந்த மண்ணு என்பவரின் மகன் அசோக்குமார் கடத்தியதும், அவர் சென்னையில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வந்ததும் தெரிந்தது.

மேலும் பன்னியூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மாணவியை மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அசோக்குமாரை கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

வாகன விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு

தேசூர் பேரூராட்சி புகையிலைக்காரர் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 49). இவர் தேசூரில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு மூகாம்பிகை என்கிற அம்பிகா என்ற மனைவியும், ஜெயஸ்ரீ , காவியா ஆகிய 2 மகள்களும், ஆதிமேனன் என்ற மகனும் உள்ளனர்.

குணசேகரன் தேசூர் - சீயமங்கலம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கம் பூண்டி கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் சோலையப்பன் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து குணசேகரன் மீது மோதினார்.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாய்ராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!