இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலம்: துணை சபாநாயகர் பிச்சாண்டி பெருமிதம்

இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலம்: துணை சபாநாயகர் பிச்சாண்டி பெருமிதம்
X

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை சபாநாயகர் பிச்சாண்டி.

இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என துணை சபாநாயகர் கு பிச்சாண்டி கூறினார்.

அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என சோமாசிபாடியில் நடந்த கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பெருமிதத்துடன் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமாசிபாடி (சோ.புதூர்) அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அய்யாகண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு உ றுப்பினர் ஆறுமுகம், ஒன்றியக்குழு துணை தலைவர் வாசுகி ஆறுமுகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கீழ்பென்னாத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் வரவேற்றார்.

முகாமில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொ ண்டு குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், பிறப்பு சான்று, உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுத்தி வருகிறார். அரசின் திட்டங்களை செயல்படுத்துவதி ல் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன சிறப்பு மருத்துவ பிரிவுகள் கொண்டுவரப்பட்டு இந்த மாவட்டத்தைசேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் முன்னேற்றம்தான் இந்த ஆட்சியின் நோக்கம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற மக்களை நேரடியாக சென்றடையும் சிறப்பு திட்டங்கள் கிடையாது. இறப்பு விகிதத்தில் தமிழகம் குறைந்திருக்கிறது. இன்றைக்கு வீடு தேடி திட்டங்கள் வரும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சியின் பொற்கால ஆட்சி. இந்த ஆட்சியை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகின்றனர்.

இவ்வாறு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசினார்.

முகாமில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு கண், பல், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீரிழிவு (சர்க்கரை நோய்), காசநோய், இருதய நோய், மகப்பேறு மருத்துவம், பால்வினை நோய்கள், குழந்தைகள் நோய், எலும்புமூட்டு நோய், புற்று நோய் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமில் அட்மா குழு தலைவர் சிவக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!