அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து வருகிறார் ஸ்டாலின்; துணை சபாநாயகர் பேச்சு
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை சபாநாயகர்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குற்றங்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அக்கறையுடன் செய்து வருபவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என துணை சபாநாயகர் பேசினார்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வலசை, தண்டரை ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தை தேசிய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்திற்கு ரூ 56 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திறப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு திருவண்ணாமலை ஒன்றிய செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன், வட்டார கல்வி அலுவலர் பவானி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானசௌந்தரி மாரிமுத்து, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி ,புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தும், பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அக்கறையுடன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த பள்ளி கட்டிடம் ஆகும்.
இந்தப் பள்ளியில் அதிக அளவில் மாணவர்களை சேர்ப்பதற்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இலவசமாக உயர்கல்வி படிக்கக்கூடிய திட்டத்தை கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டு வந்தார் .
இன்றைக்கு திராவிடம் மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இன்றி செல்லும் திட்டம், மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் , பெண்கள் மேல் படிப்பு படிக்க அவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை வழங்கிக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் பெண்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.
நிகழ்ச்சியில் துரிஞ்சாபுரம் ஒன்றிய குழு தலைவர் அண்ணாமலை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ,ஒன்றிய துணைச் செயலாளர், ஒன்றிய பொருளாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் ஆராஞ்சி ஊராட்சி குமரகுடியில் நியாய விலை கடை, காத்திருப்போர் கூடம், காரிய மேடை ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும் தமிழகஅரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருவது குறித்தும் துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி பேசினார். இதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதில் சி. என். அண்ணாதுரை எம். பி, மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயா சேகர் மற்றும் கூட்டுறவுத்துறை, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu