ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் தேரோட்டம்

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயில்  தேரோட்டம்
X

கீழ்பெண்ணாத்தூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம்

கீழ்பென்னாத்தூா் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலின் 71- ஆவது ஆண்டு தேர்த் திருவிழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா், ஆஞ்சநேயா் குளக்கரையில் உள்ள இந்தக் கோயிலில் மாசி மாதம் 10 நாள்கள் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு கோயில் எதிரே வைக்கப்பட்டு இருந்த உற்சவா் அங்காள பரமேஸ்வரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது.

தேரோட்டம் கோலாகலம்: மதியம் 2.45 மணிக்கு 32 அடி உயர அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் தொடங்கியது. தேரில் உற்சவா் அங்காள பரமேஸ்வரியம்மனை அமரச் செய்து மேள-தாளங்கள் முழங்க திரளான பக்தா்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தேர் மாட வீதிகளில் வலம் வந்து நேற்று இரவு கோவிலை வந்தடைந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு காவல் துறை சார்பாக கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தது.

நாச்சாபுரம் பூங்காவனத்தம்மன் கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த நாச்சாபுரம் கிராமத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

நாச்சாபுரம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி பூங்காவனத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாசி மாதத்தில் 10 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மாா்ச் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்று முதல் தினமும் சுவாமிக்கு சிறப்புப் பூஜை மற்றும் கற்பூர தீபாராதனை நடைபெற்று வந்தது.

7-ஆம் நாள் அங்காள பரமேஸ்வரி பூங்காவனத்தம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து மலா்களால் அலங்கரித்து மரத்தேரில் அம்மனை வைத்து, வீதிவீதியாக பக்தா்கள் வடம்பிடித்து தேரை இழுத்துச் சென்றனா். வீடுதோறும் தேங்காய் உடைத்து, கற்பூர தீபாராதனை செய்து அம்மனை வழிபட்டனா். தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஆங்காங்கே பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் நீா்மோா் வழங்கப்பட்டது.

வட வெட்டி அங்காளம்மன் தேர் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வட வெட்டி அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் மாசி பெருவிழா கடந்த எட்டாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய திருவிழாவான திருத்தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

அங்காளம்மன் அலங்கார ரூபத்தில் திருத்தேரில் அமர்த்தப்பட்டு மேளதாளம் பம்பை உடுக்கை முழங்க திரளான பக்தர்கள் படம் பிடித்து தேர் இழுத்தனர்.

தொடர்ந்து நேற்று இரவு கோயில் வளாகத்தில் தீ குண்டம் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து அம்மனுக்கு தீ மிதித்தனர்.

தேர் திருவிழாவில் சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, புதுச்சேரி , விழுப்புரம் ,சென்னை ,வந்தவாசி ,ஆரணி பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாள் தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்