ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம்

ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம்
X

கீழ்பெண்ணாத்தூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 

கீழ்பெண்ணாத்தூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம்

கீழ்பெண்ணாத்தூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக பொலகுணம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கு கண்ணாடி, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி, பொதுமருத்துவ சிகிச்சை போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த மருத்துவ முகாமில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஆறுமுகம், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அய்யாக்கண்ணு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!