திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
X

அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை  ஆட்சியர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, வந்தவாசி, போளூர், கீழ்பெண்ணாத்தூர், பெரணமல்லூர், ஆரணி, செய்யாறு , செங்கம் ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் குடல் நோய், காது மூக்கு தொண்டை பிரிவு, மகப்பேறு பிரிவு, பல் மருத்துவம், இருதய நோய், தோல் நோய் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் கொண்டு நோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல் சிகிச்சை தேவைப்படுவோர் உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு மேல் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் மகளிர் திட்ட இயக்குனர் சயத் சுலைமான், ஆட்சியர் நேர்முக உதவியாளர் திருமால், துணை இயக்குனர் செல்வகுமார் ,வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, மருத்துவர்கள், செவிலியர்கள் , அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆரணி:

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ முகாம் நடந்தது. ஒன்றியக் குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை தாங்கினார். மலையாம்பட்டு, தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து மருத்துவ குழுவினர்கள் வரவழைக்கப்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட 37 ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் ரத்த அழுத்தம், ரத்த வகை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை செய்து, சிகிச்சையளிக்கப்பட்டது.

வந்தவாசி:

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை ஒன்றிய குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் ஊராட்சி செயலாளர்கள் மக்கள் நல பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.

மொத்தம் 465 பேருக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய மருந்துகள் வழங்கப்பட்டன.

போளூர்:

போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள் தொடங்கி வைத்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு பரணிதரன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு அலுவலர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.

கீழ்பென்னாத்தூர்:

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவமுகாம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் அருணாசலம் முகாமை தொடங்கி வைத்தார். கீழ்பென்னாத்தூர் வட்டார ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவஅலுவலர் சரவணன் தலைமையில், டாக்டர்கள் ராஜலட்சுமி, பூஜா, ஜெயசுதா, பகுத்தறிவு மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதீஷ்பாபு, சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!