திருவண்ணாமலையில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு ஆலோசனை கூட்டம்
செங்கம் மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன் பங்கேற்று பள்ளி வளர்ச்சி குறித்தும் மாணவர்கள் கற்றல் திறன் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் கோ.சரவணன் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர்கள் பாக்யராஜ், கனகாபார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமைஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் மலர்விழி கலந்து கொண்டு பேசினார். இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் பிரசன்னா, கேசவன், சக்திபாலா, உடற்கல்வி இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் பேசினர். முடிவில் ஆசிரியர் சங்க செயலாளர் முருகன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் கீழ்பென்னாத்தூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோ.சரவணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை சுதா, உதவி தலைமை ஆசிரியர்கள் ஏழுமலை, பரிமளா, வார்டு கவுன்சிலர்கள் கவிதாஏழுமலை, கனகாபார்த்திபன், பாக்கியராஜ், ஜீவா மனோகரன், பி.கா.ஏழுமலை ஆகியோர் ஆலோசனைகளை வழங்கி பேசினர். இதில் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
போளூர்:
போளூரை அடுத்த பண்டிரேவ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகூட்டமைப்பு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் மன்னார்சாமி முன்னிலை வகித்தார். பயிற்றுனர் முருகன் பேசினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மேலாண்மைக் குழு மறு கூட்டமைப்பு பற்றி பேசியது வீடியோவில் ஓளிபரப்பு செய்தனர். முடிவில் ஆசிரியர் பொன்னுசாமி நன்றி கூறினார். போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கூட்டமைப்பு கூட்டம் தலைமை ஆசிரியை அஞ்சலா தலைமையில் நடந்தது. ஆசிரியை மீரா முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியை பேசினார். முடிவில் ஆசிரியர் டேவிட் ராஜன் நன்றி கூறினார்.
கொளத்தூர்:
கண்ணமங்கலத்தை அடுத்த கொளத்தூரில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமைஆசிரியை மீனா தலைமையில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஆசிரியர்கள் முபாரக், அலி பேக், ஜவகர்லால், சுசீலா, மலர்விழி, வித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமா வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி திருமால், ஒன்றிய கவுன்சிலர் குமாரராஜா, கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணி ஆனந்தன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.
வாணாபுரம்:
வாணாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. தலைமைஆசிரியர் நந்தகுமார் தலைமை தாங்கினார். தண்டராம்பட்டு ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் இளங்கோவன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செங்கம் மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன் பங்கேற்று பள்ளி வளர்ச்சி குறித்தும் மாணவர்கள் கற்றல் திறன் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கருத்துக்களை கேட்டு அதற்குண்டான தீர்வுகள் குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது. இதில் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu