தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: துணை சபாநாயர் வழங்கல்

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: துணை சபாநாயர் வழங்கல்
X

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை துணை சபாநாயர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

கீழ்பென்னாத்தூரில் 162 தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை துணை சபாநாயர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சிஆறுமுகம், ஒன்றிய ஆணையாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் வரவேற்றார். நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு ரூ.17½ லட்சம் மதிப்பில் 162 தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி பேசினார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுபாஷினி, அண்ணாமலை, பரிமளா, ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!