ரூ.10 கோடி ஏமாற்றி வியாபாரி தப்பியோட்டம்: 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் புகார்
திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், பைல் படம்
நெல் மூட்டைகளை பெற்றுக்கொண்டு 10 கோடி ரூபாய் ஏமாற்றியவரை கைது செய்யவேண்டும் என்று எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் கிராமத்தில் நம்மாழ்வார் இயற்கை பசுமை சங்கம் என்ற பெயரில் கமிஷன் மண்டி நடத்தி வந்தவர் ஜெய்கணேஷ். இவர் கடந்த இரண்டு வருடங்களாக விவசாயிகளிடமிருந்து நெல், மணிலா, மக்காச்சோளம் உள்ளிட்ட விலை பொருட்களை பெற்று விவசாயிகளுக்கு பணம் கொடுத்து வந்தார்.
திருவண்ணாமலை மட்டுமன்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம், சோமாசிபாடி, கீழ்பெண்ணாத்தூர், ஏந்தல், கச்சிராப்பட்டு, வடமாத்தூர், அணைக்கரை, காட்டாம்பூண்டி உள்ளிட்ட 70- க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து கடந்த மார்ச் மாதம் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளைகொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை விவசாயிகளிடம் வழங்காமல் தொடர்ந்து அலைகழித்து வந்ததுடன், தற்பொழுது கமிஷன் மண்டியை மூடிவிட்டு தலைமறைவாக உள்ளதாகவும் அவரிடம் இருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சேர வேண்டிய சுமார் 10 கோடி ரூபாய் பணத்தை மீட்டு தரக் கோரி பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூறுகையில் மாவட்ட எஸ்பி இடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில் ,
அரசு கொள்முதல் நிலையங்களில் 1800 ரூபாய் வழங்குவதாகவும், ஆனால் நம்மாழ்வார் இயற்கை பசுமை சங்கத்தில் அதைவிட 300 ரூபாய் கூடுதலாக 2100 முதல் 2200 வரை வழங்குவதாக கூறி எங்கள் கிராமங்களில் உள்ள சிலரிடம் ஜெகதீசன் நெல் கொள்முதல் செய்து உடனடியாக பணத்தை வழங்கியதால் ஆசைப்பட்டு தாங்களும் ஜெகதீசனிடம் தொடர்ந்து நெல் விற்பனை செய்ததாகவும், ஆனால் தற்பொழுது 300க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளைப் பெற்றுக் கொண்டு பணம் தராமல் அலைகழித்து வந்ததாகவும் இது தொடர்பாக பலமுறை அவரிடம் சென்று கேட்ட பொழுது ஒவ்வொரு விவசாயிக்கும் காசோலை வழங்கியதாகவும், ஆனால் அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளதாகவும் வேதனையுடன் கூறும் அவர்கள், மீண்டும் சென்று பணம் கேட்டால் நான் ஏமாற்ற மாட்டேன் பணம் திரும்பத் தருகிறேன் என்று கூறி தனது அலைபேசியை அனைத்து வைத்துள்ளதாகவும் கூறினர்.
கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் ஆகிய நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாகி இருப்பதாகவும் வேதனையுடன் கூறும் அவர்கள், விவசாயிகளுடைய நெல்லை பெற்றுக்கொண்டு 10 கோடிக்கு மேல் பணம் தராமல் தலைமறவாகியுள்ள ஜெகதீசனை கைது செய்து அவரிடம் இருந்து விவசாயிகள் பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிட்ட நெல் உள்ளிட்ட விளைபொருட்களை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொடுத்து பணம் பெற்று வந்த நிலையில் கமிஷன் மண்டி வைத்து மூட்டைக்கு 300 ரூபாய் வரை அதிகம் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி விவசாயிகளிடம் ஜெய்கணேஷ் ஏமாற்றி தலைமறைவாகியுள்ளது விவசாயிகளிடம் பெரும் வேதனையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu