வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை

வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை
X

வங்கி ்அதிகாரி வீட்டில் கொள்ளை (கோப்பு படம்)

வங்கி அதிகாரி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அவரது மனைவியிடம் 5 பவுன் நகையை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்

வங்கிஅதிகாரி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், அவரது மனைவியிடம் 5 பவுன் நகையை கொள்ளையடித்துக்கொண்டு தப்பினர்.

திருவண்ணாமலை அருகே வங்கி அதிகாரி வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் தூங்கிக்கொண்டிருந்த அவரது மனைவியிடம் 5 பவுன் நகையை பறித்ததோடு, ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே உள்ள பறையம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி சுவேதா (வயது 22). இவர் தனது மாமனார், மாமியாருடன் பறையம்பட்டில் வசித்து வருகிறார்.

நேற்று இரவு சுவேதா, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு, நகைகள் ஏதும் உள்ளதா என்று தேடிப் பார்த்தனர். ஆனால் நகைகள் ஏதும் பீரோவில் இல்லை. இதனையடுத்து பக்கத்து அறையில் படுத்திருந்த சுவேதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அப்போது திடுக்கிட்டு எழுந்த சுவேதா திருடன், திருடன் என கூச்சலிட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து தச்சம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் பீரோவில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

அம்மன் நகையை பறித்து ஓடிய வாலிபர்

அம்மன் நகையை பறித்து ஓடிய வாலிபரை பக்தர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தச்சம்பட்டு அருகே உள்ள அயல் ரெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது. இ்ங்கு பூசாரியாக அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 52) உள்ளார்.

கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென அம்மன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை திருடிக்கொண்டு ஓடினார். அங்கிருந்த பக்தர்கள் அவரை மடக்கி பிடித்து தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கருவட்டாம்பாறை பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் அரவிந்த் (வயது 22) என்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் மோட்டார் பைக்கை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story