விபத்து ஏற்படுத்தி தப்பிச் சென்ற லாரி; நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்!
சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநர்கள்
வேட்டவலம் அருகே ஈச்சர் லாரி மோதி ஒருவர் உயிரிழந்த நிலையில் விபத்து ஏற்படுத்தி தப்பிச்சென்ற ஈச்சர் லாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு பேருந்து ஓட்டுநர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி பகுதியில் ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த மதன்குமார் மீது ஈச்சர் லாரி மோதி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய ஈச்சர் லாரி சம்பவ இடத்தில் நிற்காமல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. அரசு பேருந்து அதே இடத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு பின்னர் வேட்டவலம் காவல் நிலையத்திற்கு வந்தடைந்தது. வேட்டவலம் காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாக விபத்து ஏற்படுத்திய ஈச்சர் லாரி மீது வழக்கு போடாமல் அரசு பேருந்து தான் விபத்தை ஏற்படுத்தியதாக அதில் அவர் உயிரிழந்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்படும் என கூறியதால், அரசு பேருந்து ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து உரிய விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்கிறோம் என காவல்துறையினர் கூறியதாகவும் இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் திரும்பிச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து இரு தினங்களாக விபத்து ஏற்படுத்திய ஈச்சர் லாரியை கண்டுபிடிப்பதில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் மெத்தனம் காட்டியதால் ஆத்திரமடைந்த 50 க்கு மேற்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர்கள் காவல்துறையை கண்டித்து வேட்டவலம் பேருந்து நிலையம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பே ரு ந் து ஓ ட் டு ன ர்க ளி ன் போராட்டத்தால் திருவண்ணாமலையில் இருந்து வேட்டவலம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து விரைந்து வந்த வே ட்டவ ல ம் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநர்களிடம் பேச்சு வார்த்தைநடத்தி விபத்தை ஏற்படுத்திய ஈச்சர் வாகனத்தை கண்டுபிடித்து அதன் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கூறியதால் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள், பயணிகள் உள்ளிட்ட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu