பள்ளி மாணவா்கள் பெற்றோருடன் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்
Road blockade by school students
ஆதாா் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோருடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் வட்டம் கோணலூா், கொளத்தூா், ஜமீன் கூடலூா் உள்பட அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் கடந்த சில தினங்களாக ஆதாா் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முயன்று வருகின்றனா். கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் ஆதாா் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் கருவி பழுதாகியுள்ளதாம்.
கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மைய ஊழியா் உடல்நிலை சரியில்லாததால் மையம் மூடப்பட்டுள்ளதாம்.
கடந்த சில நாள்களாக தினமும் வந்து ஏமாற்றத்துடன் சென்ற மாணவ, மாணவிகள் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள், அவா்களது பெற்றோா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆதாா் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்பட்டது.
சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
கீழ்பென்னாத்தூா் வட்டம் நாடழகானந்தல் ஊராட்சியில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு, நாடழகானந்தல் ஊராட்சித் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் தொழில்சாா் வல்லுநா் கெளசல்யா முன்னிலை வகித்தாா். கால்நடை மருத்துவா் ராஜ்குமாா் வரவேற்றாா்.
ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கிவைத்துப் பேசினாா். முகாமில், 300- க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், குடல்புழு நீக்கம், சுண்டுவாத அறுவைச் சிகிச்சை, மலடு நீக்கச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu