வடகிழக்கு பருவமழை; எதிா்கொள்ள தயாராக உள்ள இயந்திரங்கள் குறித்து ஆய்வு!
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ளும் வகையில், அனைத்து அரசுத் துறைகளும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தாா்.
அதன்படி, நெடுஞ்சாலைத்துறையின் கீழ்பென்னாத்தூா் உள்கோட்டத்துக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், லாரிகள், மணல் மூட்டைகள், சவுக்கு மரங்கள், இரும்பு பேரிகாா்டுகள் மற்றும் தேவையான தளவாடப் பொருள்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதை கீழ்பென்னாத்தூா் உள்கோட்டப் பொறியாளா் அற்புதகுமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, மழைக்காலத்தில் எந்த நேரத்திலும் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, உதவிப் பொறியாளா் தினேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.
போளூர்
போளூர் நெடுஞ்சாலைத்துறை மூலம் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை, ஏற்பாடுகள தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நெடுஞ்சாலைத்துறை மூலம் வட கிழக்கு பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தமிழக பொதுப்பணிகள். நெடுஞ்சாலைகள் அமைச்சர் எ.வ.வேலு, உத்தரவின்படி,
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , கண்காணிப்புப்பொறியாளர் கிருஷ்ணசாமி, அறிவுறுத்தலின்படி , கோட்ட பொறியாளர் ஞானவேல், வழிகாட்டுதலில், திருவண்ணாமலை கோட்டம், போளூர் உட்கோட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயற்கை பேரிடர் எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் லாரி, ஜேசிபி இயந்திரம், டாடா ஏசி. இரும்பு பேரிகார்டு ஜெனரேட்டர், சவுக்கு கட்டை, மரம் அறுக்கும் வாள், நீர் இரைக்கும் மோட்டார். தள்ளுவண்டி, மண்வெட்டி, கடப்பாறை, அரிவாள், பாண்டு , மணல்மூட்டை உள்ளிட்ட தளவாட கருவிகள் போன்றவைகள் போளூர் உட்கோட்டம் போளூர் பிரிவு அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனை உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu