தென் மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்: துணை சபாநாயகர் வழங்கல்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் நிவாரண பணியில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு , மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டி
கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சார்பில் தெற்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை துணை சபாநாயகர் வழங்கினார்.
தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் நிவாரண பொருட்களை துணை சபாநாயகர் பிச்சாண்டி, தூத்துக்குடி திருவைகுண்டம் ஆகிய பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பொறுப்பேற்று மேற்கொண்டு வரும் பொது பணித்துறை அமைச்சர் வேலு விடம் வழங்கினார்.
மழை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களுடன் துணை சபாநாயகர் பிச்சாண்டி அப்பகுதிகளை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் புதிய சிமெண்ட் சாலை பணிகள் துணை சபாநாயகர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள சீலப்பந்தல் ஊராட்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் பேசுகையில், சீலபந்தல் ஊராட்சியில் உள்ள புரட்சி நகர், பிள்ளையார் கோவில் தெரு மக்கள் என்னிடம் எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது, அதனால் எங்களுக்கு புதிய சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் . அவர்களின் கோரிக்கையை ஏற்று பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், பழங்குடியினர் மக்கள் வாழும் பகுதியில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதி பணிகள் மேற்கொள்ளும் வகையில் இந்த சீலப்பந்தல் ஊராட்சியில் உள்ள புரட்சிகர பிள்ளையார், கோவில் தெருக்களில் ரூபாய் 6 லட்சம் மதிப்பில் 120 மீட்டர் தூரம் கொண்ட சிமெண்ட் சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து சாலை பணிகள் நடைபெற்று வருகிறது .
இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சாலை மூலம் இப்பகுதி மக்கள் முழுமையாக பயனடைவார்கள். அதுவும் மழை நேரங்களில் இரவு நேரங்களிலும் மக்கள் மோசமாக உள்ள சாலையில் சென்று கஷ்டப்பட வேண்டாம் . இப்போது புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதால், இதன் வழியாக மக்கள் சுலபமான முறையில் செல்லலாம்.
தமிழக மக்களுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் .அதேபோல் தமிழகத்தை வளர்ச்சியான பாதையில் கொண்டு செல்கிறார் .உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனுக்குடன் செய்து கொடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தெரிவித்தார்.
ஆய்வின்போது ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஒன்றிய செயலாளர் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu