வேட்டவலம் புறவழிச்சாலை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு

வேட்டவலம் புறவழிச்சாலை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு
X

வேட்டவலம் புறவழிச்சாலை அமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டம்

வேட்டவலம் பகுதியில் புறவழிச்சாலை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது

வேட்டவலம் கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை முன்னிட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்து அப்பணி கிடப்பில் போடப்பட்டது.

இந்தநிலையில் கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்எல்ஏவான பிச்சாண்டி , வேட்டவலத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படும், என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, வேட்டவலம் புறவழிச்சாலைக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் அதற்குண்டான பணிகள் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புறவழிச்சாலை சாலை அமைப்பதற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் வேட்டவலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகார்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் புறவழிச்சாலை அமைப்பது குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் உடனடியாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!