கீழ் பென்னாத்தூர் அருகே ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

கீழ் பென்னாத்தூர் அருகே ஊராட்சி  நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
X

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள்.

கீழ்பென்னாத்தூா் அருகே ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆங்குணம் ஊராட்சியில் அம்பேத்கர் புரட்சிய இயக்கம் சார்பில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா் அருகே பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்ய மறுக்கும் ஆங்குணம் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து , கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே ஆங்குணம் அம்பேத்கா் புரட்சி இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு , இயக்கத்தின் உறுப்பினா் ஜெயந்தி தலைமை வகித்தாா். தலைமைக் குழு உறுப்பினா்கள் சக்திவேல், ஆனந்தன், ஒன்றிய துணைப் பொறுப்பாளா் அழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அம்பேத்கா் புரட்சி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஏழுமலை, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் பிரகாஷ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

அப்போது ஆங்குணம் காலணியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற மறுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருகை தராத ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுழற்சி முறையில் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் கிராம சபைக் கூட்டம் நடத்தாததால் மீண்டும் கிராம சபையை வேறொரு நாளில் நடத்த வேண்டும் .

ஆங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் மகன் ஊராட்சி விஷயங்களில் தலையிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவற்றை வலியுறுத்தி அனைவரும் பேசினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆங்குணம் ஊராட்சியில் வசிக்கும் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!