மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் மனுக்களுக்கு உடனடி தீர்வு: துணை சபாநாயகர் பெருமிதம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் மனுக்களுக்கு உடனடி தீர்வு: துணை சபாநாயகர் பெருமிதம்
X

மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமினை ஆய்வு செய்து பேசிய துணை சபாநாயகர்.

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படுவதாக துணை சபாநாயகர் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சீலப்பந்தல் ஊராட்சியில் நேற்று நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 860 கிராம ஊராட்சிகளில் 124 இடங்களில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் வரும் செப்டம்பர் 15ந் தேதி வரை நடைபெறவுள்ளது. அதில் 14 அரசு துறைகளை ஒருங்கிணைத்து மனுக்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை வட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சீலப்பந்தல் ஊராட்சியில் ஒரு தனியார் திருமண மஹாலில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இம்முகாமில் சீலப்பந்தல், புதுமல்லவாடி, மாதலம்பாடி, துரிஞ்சாபுரம், வடகரிம்பலூர் மல்லவாடி ஆகிய ஊராட்சிகளிலுள்ள பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இம்முகாமிற்கு தலைமையேற்று தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முகாமினைதொடங்கிவைத்து பொதுக்களிடமிருந்து மனுக்களை பெற்று கனிணி மூலம் பதிவேற்றம் செய்ததை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து முகாமில் நத்தம் பட்டாமாறுதல், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பேசுகையில், கடந்த பல ஆண்டு காலமாக மக்கள் தங்கள் கோரிக்கைகளைமனுவாககொடுக்கவேண்டும் என்றால் துறை சார்ந்த அதிகாரிகளை தேடி சென்று தான் மனுக்கள் கொடுக்கும் நிலை இருந்தது, ஆனால் இந்த திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு அனைத்து திட்டங்களும் மக்களை தேடி மக்கள் இல்லங்களுக்கு கிடைத்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த மக்களை தேடி முதல்வர் என்ற திட்டம் இந்த திட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு சென்று சரியாக 30 நாட்களுக்குள் இந்த மனுக்கள மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி இல்லையென்றால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் . மேலும் இது போன்ற பல்வேறு திட்டங்கள் மக்களை தேடி திட்டங்கள் சென்றடைகிறது.

மக்கள் நாங்கள் மனு கொடுக்க செல்ல வேண்டுமென்றால் தங்கள் கிராமத்திலிருந்து தாலுகா அலுவலகம் வரை சென்று தான் நாங்கள் மனு கொடுக்க நிலை இருந்தது அந்த நிலையை மாற்றி மக்களைத் தேடி திட்டங்கள் அனைத்தும் செயல்பட வேண்டும் என்று பல தட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் நீங்கள் மனு கொடுத்து பயன்பெறுங்கள் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் பேசினார்.

இந்த முகாமில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் சையத்பயாஸ் அகமது மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பாரதிராமஜெயம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, துணை தலைவர் உஷாராணி சதாசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,ஊராட்சி செயலாளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது