கண்ணமங்கலம், கீழ்பென்னாத்தூர் பகுதியில் நாளை மின் வெட்டு

கண்ணமங்கலம், கீழ்பென்னாத்தூர் பகுதியில் நாளை மின் வெட்டு
X

பைல் படம்.

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கண்ணமங்கலம், கீழ்பென்னாத்தூர் பகுதியில் நாளை மின் வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்பள்ளிப்பட்டு மற்றும் சாத்துமதுரை ஆகிய இரண்டு துணை மின் நிலையங்களில் அத்தியாவசியமான மின் சாதன பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சாத்துமதுரை, கட்டுபடி, நெல்வாய், கணியம்பாடி, துத்திப்பட்டு, சோழவரம், நாகநதி, சாம்கோ, வல்லம், வரகூர்புதூர், மோத்தக்கல், கம்மவான்பேட்டை, சலமநத்தம், மோட்டுப்பாளையம், கண்ணமங்கலம், காட்டுக்காநல்லூர், கீழ் அரசம்பட்டு மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என வேலூர் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

கீழ்பென்னாத்தூரில் உள்ள 110 கி.வோ. துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், இராஜாதோப்பு, நெடுங்காம்பூண்டி, மேட்டுபாளையம், கொளத்தூர், இராயம்பேட்டை, ஆண்டாளூர், நல்லாண்பிள்ளை பெற்றாள், காட்டு சித்தாமூர், சிறுநாத்தூர், நாரியமங்கலம், கனபாபுரம், கழிகுளம், சோமாசிபாடி, சோ.நம்மியந்தல் ஆராஞ்சி, வழுதலங்குணம், மேக்களூர் மற்றும் சுற்றுப்புறச் சூழலை பகுதியில் உள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story