கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
நிகழ்ச்சியில் பேசிய துணை சபாநாயகர்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தெரிவித்தார்.
திருவண்ணாமலை அவலூர்பேட்டை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கள் ஆறுமுகம், ராஜேந்திரன், ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துரிஞ்சாபுரம் ஒன்றிய செயலாளர் அண்ணாமலை அனைவரையும் வரவேற்றார். இதில் தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேசினர்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசும் போது,
தமிழக முதல்வர் ,கட்சியின் தலைவருமான ஸ்டாலின் வருகிற 21 , 22 தேதிகளில் திருவண்ணாமலை நகருக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் . எனவே தமிழக முதல்வரை மாவட்ட எல்லையில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க அனைவரும் பங்கேற்றிட வேண்டும்.
மேலும் வாக்குச்சாவடி முகவர்களாக உள்ளவர்கள் பொது மக்களிடம் சென்று. தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சிறப்பு திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கிக் கூற வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நமது வேட்பாளர் அதிக வித்யாசத்தில் வெற்றி பெற வாக்கு சாவடி முகவர்கள் களப்பணி ஆற்றிட வேண்டும். மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவது உறுதி. எனவே கட்சித் தொண்டர்கள் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும். இன்றைக்கு பெண்களுக்கான ஆட்சி நடந்து வருகிறது. பெண்கள் அதிக அளவில் வரும் தேர்தலில் வாக்களிக்க நமது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் தேர்தல் களப்பணி ஆற்றிட வேண்டும் என பேசினார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேரூராட்சி செயலாளர்கள் கட்சியின் மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர் கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி செயலாளர் அன்பு நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu