சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் புகைப்பட கண்காட்சி
பயனாளிகளுக்கு சுகாதார பெட்டகம் வழங்கிய துணை சபாநாயகர் பிச்சாண்டி
திருவண்ணாமலையில் சுதந்திரப் போராட்ட தலைவர்களின் புகைப்பட கண்காட்சியை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசின் மக்கள் தொடர்பாக துறை அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற கண்காட்சிகளை நடத்தி வருகிறது . அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் ,வேளாண்மை துறை சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு நல திட்ட உதவிகளையும், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கார்த்தி வேல்மாறன், வேளாண்மை துறை இணை இயக்குனர் அரக்குமார் ,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிலம்பரசன் ,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், திருவண்ணாமலை கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கணேசன் உள்ளிட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், அஞ்சல் துறை, வேளாண்மை துறை ,இந்தியன் வங்கி போன்ற துறைகளில் கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தது.
வேலூர் மத்திய மக்கள் தொடர்பாக அலுவலக கள விளம்பர உதவி அலுவலர் ஜெயகணேஷ் நன்றி கூறினார்.
வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
பின்னர் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை, துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த காட்டுமலையனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
காட்டுமலையனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாயகி அருணாசலம் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துவடிவு முனியன், ராஜேந்திரன், பாக்கியலட்சுமி லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கீழ்பென்னாத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் வரவேற்றார். முகாமை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு சுகாதார பெட்டகம் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கி பேசினார். முகாமில் காய்ச்சல், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தோல் நோய், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான மருத்துவம், வாய்ப்புற்று நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
இதில் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் வேட்டவலம் விஜயகுமார் நன்றி கூறினார்.
முன்னதாக, கீழ்பென்னாத்தூர் தொகுதி திருவண்ணாமலை ஒன்றியம் சு.கம்பப்பட்டு கிராமத்தை சேர்ந்த மாபுக்கான் என்பவரின் 3 மகள்கள் ஏரி நீரில் மூழ்கி இறந்தமைக்கு உதவிடும் பொருட்டு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, 3 லட்சம் ரூபாய்கான காசோலை மற்றும் அரசாணைகளை அவர்களது பெற்றோரிடம் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu