புகைப்படம் மற்றும் வீடியோ தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டம்!

புகைப்படம் மற்றும் வீடியோ தொழிலாளர்கள் நலச்சங்க கூட்டம்!
X

மரக்கன்று நட்டு விழாவினை தொடங்கி வைத்த சப் இன்ஸ்பெக்டர் பிரபு 

புகைப்படம் மற்றும் வீடியோ தொழிலாளர்கள் நல சங்க பொதுக்குழு கூட்டம் கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்றது

புகைப்படம் மற்றும் வீடியோ தொழிலாளர்கள் நல சங்க பொதுக்குழு கூட்டம் கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்றது.

தமிழ் தேசம் புகைப்படம் மற்றும் வீடியோ தொழிலாளர்கள் நல சங்கம் கீழ்பெண்ணாத்தூர் மற்றும் மங்களம் வட்டம் சார்பில் கீழ்பெண்ணாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது .

கூட்டத்திற்கு கீழ்பெண்ணாத்தூர் வட்ட தலைவர் முத்துராமன் தலைமை தாங்கினார். வட்ட துணைத்தலைவர் பாலு, வட்ட பொருளாளர் தசரதன் செயற்குழு உறுப்பினர்கள் கதிரவன் ,முருகன், பாலாஜி வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.

வட்டர் செயலாளர் மோகன் அனைவரும் வரவேற்று பேசினார், மாநில தலைவர் செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், சங்க வளர்ச்சி குறித்தும், சங்கத்தில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் ,உறுப்பினர்களின் பிரச்சனைகள் எவ்வாறு அணுகுவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

இதில் மாநில பொதுச் செயலாளர் செந்தில் வேலவன் ,முன்னாள் மாநில பொருளாளர் குப்புசாமி ,மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நிறைவில் கீழ்பெண்ணாத்தூர் வட்ட பொருளாளர் பச்சையப்பன் நன்றி கூறினார்.

முன்னதாக கீழ்பெண்ணாத்தூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு கலந்து கொண்டு மரக்கன்று நட்டு விழாவினை தொடங்கி வைத்தார்.

இதில் மாநில தலைவர் செழியன், மாநில பொதுச்செயலாளர் செந்தில்வேலன், மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட பொருளாளர் சிலம்பரசன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!